உள்ளடக்கம்

நிலையின் உள்ளடக்கம்

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 07

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 07

audios

மரணத்தை படைத்தது மனிதனை சோதிப்பதற்கே, அல்லாஹ்வை வணங்கி நபி வழியில் வாழ்ந்தீர்களா, அல்லது ஷெய்தானுக்கு வழிப்பட்டீர்களா என்று சோதிக்கப்படுவீர்கள். வாழ்வும் உலகமும் நிரந்தமல்ல. உலக அழிவின் போது மனிதனின் நிலை. பூமியும் மலைகளும் பஞ்சு போல் பறக்கும்.

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 06

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 06

audios

ரிஸாலத், ரஸூல்மார்களின் பால் மனிதனின் தேவைப்பாடு, மறைவான விடயங்களை இறைத்தூதர்கள் மூலமே அறியலாம், நேர்வழியை அறிய பகுத்தறிவு மட்டும் போதாது, தூதர்கள் ஏன் மனிதர்களாக அனுப்பப் பட்டார்கள்? இறைத்தூதர்கள் பற்றி அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நிலைப்பாடு.

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 05

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 05

audios

வேதங்களின் பால் மனிதன் தேவையுள்ளவன், வேதங்களை நம்புவதற்கான ஆதாரங்கள், எவ்வாறு நம்புவது? குர்ஆனில் கூறப்பட்டுள்ள வேதங்கள், ஸுஹுபுகள், இறுதிவேதம் அல்குர்ஆன், முன்னைய வேதங்கள் பற்றி சுருக்கப் பார்வை, அவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 04

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 04

audios

வானவர்களை எவ்வாறு நம்ப வேண்டும்? எப்போது படைக்கப்பட்டார்கள்? அவர்களின் அங்க அமைப்பு, பண்புகள், தராதரங்கள், வசிப்பிடங்கள், எண்ணிக்கை, பெயர்களும் பொறுப்புக்களும், சக்திகள்

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 02

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 02

audios

ஓரிறைக் கொள்கையின் வகைகள், ருபூபிய்யா, அதனை மறுத்தவர்கள், உலூஹிய்யா, அதில் மாறு செய்தோர், பெயர்கள், பண்புகள், அதில் வழிதவறியோர்.இணைவைப்பு என்றால் என்ன? அதன் விபரீதங்கள், எப்போது அது உருவானது? தற்போது சமூகத்திலுள்ள இணைவைப்புக்கள்

தொழுகை செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்

தொழுகை செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்

cards

முஸ்லிமாக இருக்க வேண்டும்: முஸ்லிமல்லாதோரின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எண்ணம்: தொழ வேண்டுமென்ற எண்ணம் உள்ளத்தால் ஏற்பட வேண்டும். அதை வாயால் மொழிவது கூடாது. கிப்லாவை முன்னோக்குதல்: முடியுமானவர்கள் கஅபா இருக்கும் திசையை முன்நோக்கியிருக்க வேண்டும். அவ்ரத்தை மறைத்தல்: ஆண்களும், பெண்களும் தாம் அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகளை ஆடையினால் மறைத்திருக்க வேண்டும். நேரம் நுழைந்திருத்தல்: ஒவ்வொரு தொழுகைக்கும் அதற்குரிய நேரம் நெருங்கியிருக்க வேண்டும். நேரம் தவறி தொழுதால் தொழுகை செல்லுபடியாகாது. சுத்தம்: தண்ணீர் ஊடுருவாமல் தடுக்கும் எந்தப் பொருளும் உடலில் இருக்கக் கூடாது. உடல், உடை, இடம் ஆகிய மூன்றிலும் அசுத்தம் எதுவும் இருக்கக் கூடாது. பருவமடைந்திருத்தல்: பருவமடையாத சிறுபிள்ளைகளுக்கு தொழுகை கடமையாகாது. புத்தி சுயாதீனமாக இருத்தல்: புத்தி நீங்கியவர்களுக்கு தொழுகை கடமையாகாது.

அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த ஒழுக்கம்

அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த ஒழுக்கம்

cards

சாப்பிட்டு முடிந்ததும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “அல்ஹம்துலில்லாஹ் அல்லதீ அத்அமனீ ஹாதா, வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வா”. (எனது சக்திக்குட்பட்ட எதுவுமின்றி இவ் உணவை எனக்கு வழங்கி, அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்). (ஆதாரம்: அபூதாவுத் 4025, திர்மிதி 3458).

இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்

இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்

cards

இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்: 1. அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியான உண்மையான இறைவன் வேறு எவரும் இல்லை என சாட்சி கூற வேண்டும். 2. தொழுகையை நிலைநாட்ட வேண்டும். 3. ஸகாத் (பண வரி) கொடுக்க வேண்டும். 4. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும். 5. வசதியுள்ளவர்கள் புனித மக்காவிற்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

பெருநாள் தொழுகை

பெருநாள் தொழுகை

cards

ரமழான் மாத நோன்பை முடித்த பின்னர் வரும் ஈதுல் பித்ர், மற்றும் இஸ்லாமிய நாட்காட்டியின் படி துல்ஹஜ் பிறை 10ம் நாளான ஈதுல் அழ்ஹா ஆகிய இரு தினங்களே முஸ்லிம்களுக்கான பண்டிகைத் தினங்களாகும். 1. அதன் சட்டம்: பெருநாள் தொழுகையானது வழியுறுத்தப்பட்ட ஸுன்னாவாகும். அதனை சிலர் தொழுவதால் மீதமுள்ள அனைவரினதும் கடமை நீங்கிவிடும். ஒருவரும் அதை நிறைவேற்றாவிட்டால் அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர். 2. அதன் நிபந்தனை: நேரமும், மக்கள் கூட்டமும் இத்தொழுகயை நிறைவேற்றுவதற்கு மிக முக்கியமான நிபந்தனையாக காணப்படுகிறது. பெருநாள் தினம் அல்லாத வேறு தினங்களில் தொழுவதோ அல்லது மூன்று பேருக்கு குறைவான எண்ணிக்கையில் இதை நிறைவேற்றுவதோ முடியாத ஒன்றாகும். அவ்வாறு நிறைவேற்றினால் இத்தொழுகை செல்லுபடியற்றதாக கருதப்படும். பயணத்திலிருப்பவர் இத்தொழுகையை தொழுவது அவசியம் கிடையாது. 3. நிறைவேற்றும் இடம்: இத்தொழுகை மைதானம் போன்ற பரந்த நிலப்பரப்பில் மேற்கொள்வதே மிகவும் சிறந்த ஒன்றாகும். 4. நிறைவேற்றும் நேரம்: இது முற்பகல் வேளையில் நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகையாகும். அதாவது சூரியன் உதித்து ஒரு ஈட்டியளவு உயர்ந்ததிலிருந்து இதன் நேரம் ஆரம்பமாகிறது. 5. நிறைவேற்றும் முறை: இது இரண்டு ரக்அத்துக்களை கொண்ட தொழுகையாகும். இத் தொழுகையின் முதல் ரக்அத்தில் இஹ்ராம் தக்பீரைத் தவிர அல்லாஹு அக்பர் என ஏழு முறை கூற வேண்டும். இரண்டாம் ரக்அத்தில் இஹ்ராம் தக்பீரைத் தவிர ஐந்து முறை அல்லாஹு அக்பர் எனக் கூற வேண்டும். முதல் ரக்அத்தி சூறதுல் பாதிஹாவிற்குப் பிறகு அல்குர்ஆனின் ஐம்பதாம் அத்தியாயத்தையும், இரண்டாம் ரக்அத்தில் சூறதுல் பாதிஹாவிற்குப் பிறகு ஐம்பத்தி நான்காம் அத்தியாயத்தையும் ஓதிக்கொள்ள வேண்டும். 6. சொற்பொழிவு: பெருநாள் தொழுகையில் முதலில் தொழுகை நடத்திவிட்டு, அதன் பிறகு இமாம் உரை நிகழ்த்த வேண்டும். இத் தொழுகையை தவறவிட்டவர்கள் திரும்ப தொழுதுகொள்வது போல் சொற்பொழிவும் திரும்பவும் நிகழ்த்தப்படுவதில்லை.

கூட்டுத் தொழுகையும், அதன் சிறப்புக்களும்

கூட்டுத் தொழுகையும், அதன் சிறப்புக்களும்

cards

கூட்டுத் தொழுகையும், அதன் சிறப்புக்களும்: 1. கூட்டுத்தொழுகை என்பது அவசியம் செய்ய வேண்டிய ஒன்றாகும். முஸ்லிமான இருபாலரும் குறிப்பாக ஆண்கள் இக்கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டுமென அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் தெளிவான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. தக்க காரணத்தைத் தவிர அதான் ஓசையைக் கேட்கும் அனைவரும் பள்ளிவாயிலுக்கு சமூகம் தர வேண்டும் என நபி r அவர்கள் உணர்த்தியுள்ளார்கள். 2. நயவஞ்சகர்களுக்கு கடினமான தொழுகை: அபூஹுரைரா t அவர்கள் அறிவிக்கிறார்கள்: “இரண்டு தொழுகைகள் நயவஞ்சகர்கள் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர்” என நபி r அவர்கள் கூறினார்கள்: (ஆதாரம்: புஹாரி 657). அல்லாஹ் கூறுகிறான், “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்து, நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் மிகப் பயபக்தியுடையவரே, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணியத்திற்குரியவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நுட்பமானவன்.” (அல்குர்ஆன் 49:13).

அதான், மற்றும் இகாமத்தினது நிபந்தனைகள்

அதான், மற்றும் இகாமத்தினது நிபந்தனைகள்

cards

அதான், மற்றும் இகாமத்தினது நிபந்தனைகள்: அதான் என்பது தொழுகை நேரம் நெருங்கிவிட்டது என மக்களுக்கு அறிவிப்பதாகும். இகாமத் என்பது தொழுகைக்காக எழுந்து நிற்குமாறு மக்களுக்கு கூறுவதாகும். 1. அதான் சொல்பவர் புத்தி சுயாதீனமுள்ள, முஸ்லிமாக இருக்க வேண்டும். 2. தொழுகையின் நேரம் நுழைந்த பின்னரே அதான் கூற வேண்டும். அதற்கு முன்னதாக அதான் கூறுவது கூடாது. தொழுகை ஆரம்பிக்க முன்னதாக இகாமத் கூற வேண்டும். 3. இவை இரண்டையும் அதன் சரியான வரிசைப்படியே கூற வேண்டும். 4. இவை இரண்டும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டது போன்று அரபியில் மாத்திரமே கூற வேண்டும்.

முஸ்லிம்கள் மேரியை (மர்யமை) நேசிக்கின்றனர். அவரை மதிக்கின்றனர்.

முஸ்லிம்கள் மேரியை (மர்யமை) நேசிக்கின்றனர். அவரை மதிக்கின்றனர்.

cards

முஸ்லிம்கள் மேரியை (மர்யமை) நேசிக்கின்றனர். அவரை மதிக்கின்றனர். அவர் மனித தீண்டுதல் இன்றி இயேசுவை பிரசவித்தார். அதற்காக அவரை வணங்குவதில்லை.

“படைப்புக்களுக்கு படைப்பாளன் ஒருவன் இருக்கிறான்.”

“படைப்புக்களுக்கு படைப்பாளன் ஒருவன் இருக்கிறான்.”

cards

“படைப்புக்களுக்கு படைப்பாளன் ஒருவன் இருக்கிறான்”. உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இவ் உள்ளுணர்விலே பிறக்கின்றன.

வாழ்வாதாரமளிப்பவன் அல்லாஹ்வே

வாழ்வாதாரமளிப்பவன் அல்லாஹ்வே

videos

"ரஸ்ஸாக் என்பது அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்றுரஸ்ஸாக் என்ற பெயர் இடம்பெற்றுள்ள சில இறைவசனங்கள்ரஸ்ஸாக் என்பதன் விளக்கமும், அது பற்றிய ஸலபுகளின் கருத்துக்களும்ரிஸ்கில் மிகச்சிறந்தது இறையச்சமேமக்களுக்கு மத்தியில் சில நோக்கங்களுக்காக அல்லாஹ் வாழ்வாதாரத்தில் தராதரம் வைத்துள்ளான்ரிஸ்க் விஸ்தீரனமாக சில வழிகள்"

ஹஜ்ஜின் சிறப்பு

ஹஜ்ஜின் சிறப்பு

videos

"வணக்கங்களில் உடல் சார்ந்தது, பணம் சார்ந்தது, இரண்டும் கலந்தது என மூன்று வகைகள் உணடுமற்றுமொரு கோணத்தில் செயல் ரீதியான வணக்கம், தவிரந்து கொள்வது சம்பந்தமான வணக்கம் என இரு வகைகளும் உண்டுஹஜ் மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.ஹஜ்ஜின் முக்கியத்துவமும் சிறப்பும்ஹஜ்ஜில் சக்தி பெறுதல் என்பதன் விளக்கம்ஹஜ்ஜின் மூலம் கிடக்கும் உலகவியல், சமயப் பயன்பாடுகள்"

முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றல்

முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றல்

videos

"முஸ்லிம்களுக்கு மத்தியில் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளல், அவர்களின் துயர் துடைத்தல் இறையச்சம், நற்கருமங்களில் பரஸ்பரம் உதவி செய்வது பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள்முஸ்லிம்களுக்கு உதவிபுரிய பல வழிகள் உள்ளன. பணத்தால், உடலால், நல்ல சிந்தனை, கருத்துக்களால்....."