எம்மைப் பற்றி

எம்மைப் பற்றி

“இஸ்லாமிய வழிகாட்டி” அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் வழிமுறையைத் தழுவிய, அல்உஸூல் சர்வதேச மையத்துடன் இணைந்து செயற்படக்கூடிய ஓர் இஸ்லாமிய இணையத்தளமாகும். சத்தியத்தை தேடுபவர்களையும், நவீன வாழ்வில் கானல் நீரால் நிரம்பியிருக்கும் பூஞ்சோலைகளைத் தேடி, தீமைகளையும், அநியாயங்களையும் புரிந்து தம்மைப் படைத்த இறைவனின் வழியை விட்டும் தூரமாகிச் செல்லும் மக்களையும் நல்வழிப்படுத்துகின்ற ஓர் கலங்கரை விளக்காக நாம் இவ் இணையத்தளம் ஊடாக செயற்படுகிறோம்.

“இஸ்லாமிய வழிகாட்டி” இணையத்தளம் தற்போது ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஃபிலிப்பைன்ஸ், கொரியன், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இயங்கிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில், அல்லாஹ்வின் உதவியுடன், உலகின் எல்லா மொழிகளையும் உள்ளடக்கிய ஓர் இணையத்தளமாக இதனை மேம்படுத்த இருக்கிறோம்.

“இஸ்லாமிய வழிகாட்டி”யின் துறைகள்:

அல்குர்ஆன் மற்றும் தப்ஸீர் துறை:

இது உலகின் பல நாடுகளில் உள்ள காரிகளின், கிராஅத்துக்களையும், அந்நாட்டு மொழியிலான மொழிபெயர்ப்புக்களையும் உள்ளடக்கியுள்ளது. “இஸ்லாமிய வழிகாட்டி” குழுவினர் இத்துறையை பல புதிய கிராஅத்துகள், மொழிபெயர்ப்புகள் மூலம் மேம்படுத்துகின்றனர்.

வீடியோ துறை:

இவ் இணையத்தளத்தில் உள்ள மொழிகளின் முதல்தர இஸ்லாமிய வீடியோக்களை இது வழங்குகிறது. இவ் வீடியோக்கள் சத்தியத்தைத் தேடுபவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்கின்றன. இவ் வீடியோப் பதிவுகளில் பேசுபவர்கள் சத்தியத்தைத் தேடுபவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்து, இஸ்லாத்தின் எதிரிகளால் இஸ்லாத்தின் மீது பூசப்படும் நச்சுக்கருத்துக்களை கலைந்து இஸ்லாத்தின் தூய்மையை பாதுகாக்கின்றனர். இந்த வீடியோக்கள் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு, சத்தியத்திற்கான ஆதாரங்களை வழங்குகின்றன.

புத்தகத் துறை:

இத் துறையானது, மிகவும் அவதானத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட தரம் வாய்ந்த எழுத்து, மற்றும் தரம்வாய்ந்த மொழிபெயர்ப்பை உள்ளடக்கிய, பல இஸ்லாமிய புத்தகங்களை உள்ளடக்கியுள்ளது. இன்றைய உலகில் சத்தியத்தை தேடுபவர்களது தேவைகளை இப்புத்தகங்களும் நிறைவேற்றுகின்றன. எந்தவொரு மிகைப்படுத்தப்பட்ட தகவலோ அல்லது பொய்களும், கற்பனைகளும் கலந்ததாகவோ இல்லாமல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் பல்வேறு தலைப்புகளில் இப்புத்தகங்கள் உண்மையான தகவல்களைப் பரிமாறுகின்றன. இணையத்தளமானது எந்த வரம்புகளும், நிபந்தனைகளும் இல்லாமல் எல்லா புத்தகங்களையும் தரவிறக்கம் செய்யும் வசதியை வாசகர்களுக்கு வழங்குகிறது.

ஆடியோ துறை:

இது இஸ்லாமிய ஆடியோ பதிவுகளை வழங்குகிறது. மேற்குறிப்பிடப்பட்ட வீடியோ துறையிலும், புத்தக துறையிலும் விவாதிக்கப்பட்ட அதே தலைப்புகளை வாசகர்களினதும், பார்வையாளர்களினதும் நலன் கருதி ஆடியோ வடிவில் வழங்குகிறது.

அட்டைகள் துறை:

இது சத்தியத்தை தேடுபவர்களுக்கு சிறந்த தகவல்களை வழங்கவும், அவர்களது சில கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையிலும் மிகவும் சுருக்கமான தகவல்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன. இதன் மூலம் இஸ்லாம் பற்றிய உண்மைகள், அதன் நெறிமுறைகள் மற்றும் நல்லொழுக்கங்களை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

மொபைல் போன் துறை:

ஆடியோக்கள், புத்தகங்கள், மற்றும் ஏனைய ஊடக கல்விசார் வசதிகளை பல செயலிகளில் உருவாக்கி நம் மொபைலில் பயன்படுத்தும் வசதியை இத்துறை வழங்குகிறது.

முஸ்லிமல்லாத சகோதர்களுடனான நேரடி உரையாடல்:

இப் பகுதியில் இருப்போர் உங்கள் மொழியிலே உங்களிடம் உரையாடுவார்கள். நீங்கள் கூறுபவற்றை செவிமடுத்து, இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களையும், இஸ்லாம் பற்றிய உங்கள் கேள்விகளுக்கான பதில்களையும் உங்கள் மொழியிலே வழங்குவார்கள்.

தகவல் துறை:

இஸ்லாத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பல இணையத்தளங்களும், செயலிகளும் இருந்த போதிலும், ஓர் தகவலைத் தேட பல இணையத்தளங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் இவ் இணையத்தளத்தில் அதை நாம் நிவர்த்தி செய்துள்ளோம். இஸ்லாம் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வண்ணம் இவ் இணையத்தளத்தை நாம் வடிவமைத்துள்ளோம்.

எமது பயனர்களின் பல்வேறு தேவைகளையும், அவர்களின் வெவ்வேறு வாழ்க்கை சூழ்நிலைகள், கல்வி மற்றும் கலாச்சார பின்னணி போன்ற அனைத்தையும் கருத்திற்கொண்டு, அவை அனைத்தையும் திருப்தி செய்யும் வகையில் பல்வேறு வகையான தலைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களை வெளியிட “இஸ்லாமிய வழிகாட்டியா”க நாம் ஆர்வமாக உள்ளோம்.

நீங்கள் இத்தளத்தில் ஏதாவது பிரச்சினைகளை சந்தித்தால் அல்லது உங்களிடம் ஒரு கேள்வி இருந்து அதற்கான பூரண பதிலை இத்தளத்தில் கண்டுகொள்ள முடியாவிட்டால் நீங்கள் எம்முடன் எந்நேரத்திலும் தொடர்புகொள்ள முடியும்.

Choose Your Language