கூட்டுத் தொழுகையும், அதன் சிறப்புக்களும்

474
கூட்டுத் தொழுகையும், அதன் சிறப்புக்களும்

கூட்டுத் தொழுகையும், அதன் சிறப்புக்களும்:

1. கூட்டுத்தொழுகை என்பது அவசியம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.

முஸ்லிமான இருபாலரும் குறிப்பாக ஆண்கள் இக்கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டுமென அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் தெளிவான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. தக்க காரணத்தைத் தவிர அதான் ஓசையைக் கேட்கும் அனைவரும் பள்ளிவாயிலுக்கு சமூகம் தர வேண்டும் என நபி r அவர்கள் உணர்த்தியுள்ளார்கள்.

2. நயவஞ்சகர்களுக்கு கடினமான தொழுகை:

அபூஹுரைரா t அவர்கள் அறிவிக்கிறார்கள்: “இரண்டு தொழுகைகள் நயவஞ்சகர்கள் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர்” என நபி r அவர்கள் கூறினார்கள்: (ஆதாரம்: புஹாரி 657).

அல்லாஹ் கூறுகிறான், “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்து, நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் மிகப் பயபக்தியுடையவரே, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணியத்திற்குரியவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நுட்பமானவன்.” (அல்குர்ஆன் 49:13).

Choose Your Language