தொழுகையின் கடமைகள்
1. ஒவ்வொரு நிலைக்கும் “அல்லாஹு அக்பர்” எனக் கூற வேண்டும்.
2. தொழுகையை நடாத்தும் இமாமும், தனியாகத் தொழுபவரும் ருகூவிலிருந்து எழும் போது, “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா” (அல்லாஹ்வை யார் புகழ்ந்தாரோ அவரின் புகழை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்) எனக் கூற வேண்டும்.
3. ருகூவிலிருந்து எழுந்ததும், “ரப்பனா வலகல் ஹம்த்” (எமது இரட்சகனே, உனக்கே சர்வப் புகழும்) என்று கூற வேண்டும்.
4. ஜமாத்துடன் தொழுபவர்கள் ருகூவிலிருந்து எழும் போது “ரப்பனா வலகல் ஹம்த்” (எமது இரட்சகனே, உனக்கே சர்வப் புகழும்) என்று கூற வேண்டும்.
5. ருகூவின் போது “ஸுப்ஹான ரப்பியல் அழீம்” (மகத்துவமிக்க எனது இரட்சகன் மிகவும் தூய்மையானவன்) என்று ஒரு முறை கூற வேண்டும்.
6. ஸுஜூதில் “ஸுப்ஹான ரப்பியல் அஃலா” (உயர்வான எனது இரட்சகன் மிகவும் தூயவன்) என்று ஒரு முறை கூற வேண்டும்.
7. இரண்டு ஸுஜூதுக்குமிடையிலுள்ள அமர்வில் “ரப்பிஹ் ஃபிர்லீ” (என் இரட்சகனே, என்னை மன்னித்தருள்வாயாக) என்று ஒரு முறை கூற வேண்டும்.
8. இமாம் முதல் அத்தஹிய்யாத்திற்கு அமர மறந்து, எழுந்துவிட்டால் பின்னால் தொழுபவர்களில் ஒருவர் அதை நினைவுபடுத்திட வேண்டும். அவர்களும் மறந்துவிட்டால் இமாமுடன் சேர்ந்து அவர்களும் அடுத்த ரக்அத்திற்காக எழ வேண்டும். எழாமல் இமாமுக்கு மாற்றம் செய்யக்கூடாது. ஏனெனில் தொழுகையில் இமாமைப் பின்பற்றுவது மிக முக்கிய கடமையாகும்.