தொழுகை செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்

தொழுகை செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்

முஸ்லிமாக இருக்க வேண்டும்:

முஸ்லிமல்லாதோரின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

எண்ணம்:

தொழ வேண்டுமென்ற எண்ணம் உள்ளத்தால் ஏற்பட வேண்டும். அதை வாயால் மொழிவது கூடாது.

கிப்லாவை முன்னோக்குதல்:

முடியுமானவர்கள் கஅபா இருக்கும் திசையை முன்நோக்கியிருக்க வேண்டும்.

அவ்ரத்தை மறைத்தல்:

ஆண்களும், பெண்களும் தாம் அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகளை ஆடையினால் மறைத்திருக்க வேண்டும்.

நேரம் நுழைந்திருத்தல்:

ஒவ்வொரு தொழுகைக்கும் அதற்குரிய நேரம் நெருங்கியிருக்க வேண்டும். நேரம் தவறி தொழுதால் தொழுகை செல்லுபடியாகாது.

சுத்தம்:

தண்ணீர் ஊடுருவாமல் தடுக்கும் எந்தப் பொருளும் உடலில் இருக்கக் கூடாது. உடல், உடை, இடம் ஆகிய மூன்றிலும் அசுத்தம் எதுவும் இருக்கக் கூடாது.

பருவமடைந்திருத்தல்:

பருவமடையாத சிறுபிள்ளைகளுக்கு தொழுகை கடமையாகாது.

புத்தி சுயாதீனமாக இருத்தல்:

புத்தி நீங்கியவர்களுக்கு தொழுகை கடமையாகாது.

Choose Your Language