தொழுகையின் அமைப்புகள் (ருக்குன்கள்)

466
தொழுகையின் அமைப்புகள் (ருக்குன்கள்)

தொழுகையின் அமைப்புகள் (ருக்குன்கள்)

தொழுகையின் அமைப்புகள் (ருக்குன்கள்):

1- நின்றுகொள்ளல்: கடமையான ஒவ்வொரு தொழுகையிலும் நின்று தொழ சக்தியுள்ளோர் நின்று தொழுதல்

2- ஆரம்பமாக “அல்லாஹு அக்பர்” எனக் கூற வேண்டும்.

3 ஒவ்வொரு ரக்அத்தின் ஆரம்பத்திலும் சூறதுல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும்.

4- ருக்கூ விற்காக குணிய வேண்டும்.

5- ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்கு வர வேண்டும்.

6- சிரம் பணிய வேண்டும். (ஸஜ்தா)

7- சிரம் பணிந்த பின் நடு இருப்பில் அமர வேண்டும். மீண்டும் இரண்டாம் தடவையாக சிரம் பணிய வேண்டும். பின்னர் நிலைக்கு வர வேண்டும்.

8- ஒவ்வொரு நிலையிலும் சற்று தாமதிக்க வேண்டும்.

9 – கடைசி அத்தஹிய்யாத்திற்காக அமர வேண்டும்.

10- கடைசி அத்தஹிய்யாத்தை ஓத வேண்டும்.

11- பின்னர் ஸலாம் கூற வேண்டும்

12- இவற்றை வரிசைப்படி செய்ய வேண்டும்.

Choose Your Language