உள்ளடக்கம்

நிலையின் உள்ளடக்கம்

பெண்கள் முகம் மறைப்பது வணக்கமா ? வழக்கமா ? ஜயங்களும் தெளிவுகளும்

பெண்கள் முகம் மறைப்பது வணக்கமா ? வழக்கமா ? ஜயங்களும் தெளிவுகளும்

books

இந்நூலானது பெண்கள் முகம் மூடுவது தொடர்பாக வழிதவறிச் சென்று , அது ஹராமெனவும் , நபி ( ஸல் ) அவர்களது மனைவியருக்கு மத்திரம்தான் இந்தச் சட்டமென்பதாகவும் கூறிக்கொண்டிரிப்போருக்கு மறுப்பாக எழுதப்பட்டுள்ளது . அவர்கள் முன்வைக்கும் சந்தேகங்களை நூலாசிரியர் விரிவாகக்கூறி , அதற்கான பதில்களை அல்குர்ஆன் , ஸுன்னா ஆதாரங்களுடன் , ஸலபுகளின் கூற்றையும் பயன்படுத்தி தெளிவாக விளக்கியுள்ளார் .

அல்லாஹவை நம்பிக்கை கொள்வது நான்கு விடயங்களை உள்ளடக்குகிறது.

அல்லாஹவை நம்பிக்கை கொள்வது நான்கு விடயங்களை உள்ளடக்குகிறது.

cards

அல்லாஹவை நம்பிக்கை கொள்வது நான்கு விடயங்களை உள்ளடக்குகிறது. 1. அல்லாஹ்வின் இருப்பை நம்பிக்கை கொள்ளல். 2. அல்லாஹ்வின் இறைமையை நம்பிக்கை கொள்ளல். 3. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை நம்பிக்கை கொள்ளல். 4. அல்லாஹ்வின் பரிபாலணத்தை நம்பிக்கை கொள்ளல்.

தொழுகையின் கடமைகள்

தொழுகையின் கடமைகள்

cards

தொழுகையின் கடமைகள் 1. ஒவ்வொரு நிலைக்கும் “அல்லாஹு அக்பர்” எனக் கூற வேண்டும். 2. தொழுகையை நடாத்தும் இமாமும், தனியாகத் தொழுபவரும் ருகூவிலிருந்து எழும் போது, “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா” (அல்லாஹ்வை யார் புகழ்ந்தாரோ அவரின் புகழை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்) எனக் கூற வேண்டும். 3. ருகூவிலிருந்து எழுந்ததும், “ரப்பனா வலகல் ஹம்த்” (எமது இரட்சகனே, உனக்கே சர்வப் புகழும்) என்று கூற வேண்டும். 4. ஜமாத்துடன் தொழுபவர்கள் ருகூவிலிருந்து எழும் போது “ரப்பனா வலகல் ஹம்த்” (எமது இரட்சகனே, உனக்கே சர்வப் புகழும்) என்று கூற வேண்டும். 5. ருகூவின் போது “ஸுப்ஹான ரப்பியல் அழீம்” (மகத்துவமிக்க எனது இரட்சகன் மிகவும் தூய்மையானவன்) என்று ஒரு முறை கூற வேண்டும். 6. ஸுஜூதில் “ஸுப்ஹான ரப்பியல் அஃலா” (உயர்வான எனது இரட்சகன் மிகவும் தூயவன்) என்று ஒரு முறை கூற வேண்டும். 7. இரண்டு ஸுஜூதுக்குமிடையிலுள்ள அமர்வில் “ரப்பிஹ் ஃபிர்லீ” (என் இரட்சகனே, என்னை மன்னித்தருள்வாயாக) என்று ஒரு முறை கூற வேண்டும். 8. இமாம் முதல் அத்தஹிய்யாத்திற்கு அமர மறந்து, எழுந்துவிட்டால் பின்னால் தொழுபவர்களில் ஒருவர் அதை நினைவுபடுத்திட வேண்டும். அவர்களும் மறந்துவிட்டால் இமாமுடன் சேர்ந்து அவர்களும் அடுத்த ரக்அத்திற்காக எழ வேண்டும். எழாமல் இமாமுக்கு மாற்றம் செய்யக்கூடாது. ஏனெனில் தொழுகையில் இமாமைப் பின்பற்றுவது மிக முக்கிய கடமையாகும்.

தொழுகை செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்

தொழுகை செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்

cards

முஸ்லிமாக இருக்க வேண்டும்: முஸ்லிமல்லாதோரின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எண்ணம்: தொழ வேண்டுமென்ற எண்ணம் உள்ளத்தால் ஏற்பட வேண்டும். அதை வாயால் மொழிவது கூடாது. கிப்லாவை முன்னோக்குதல்: முடியுமானவர்கள் கஅபா இருக்கும் திசையை முன்நோக்கியிருக்க வேண்டும். அவ்ரத்தை மறைத்தல்: ஆண்களும், பெண்களும் தாம் அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகளை ஆடையினால் மறைத்திருக்க வேண்டும். நேரம் நுழைந்திருத்தல்: ஒவ்வொரு தொழுகைக்கும் அதற்குரிய நேரம் நெருங்கியிருக்க வேண்டும். நேரம் தவறி தொழுதால் தொழுகை செல்லுபடியாகாது. சுத்தம்: தண்ணீர் ஊடுருவாமல் தடுக்கும் எந்தப் பொருளும் உடலில் இருக்கக் கூடாது. உடல், உடை, இடம் ஆகிய மூன்றிலும் அசுத்தம் எதுவும் இருக்கக் கூடாது. பருவமடைந்திருத்தல்: பருவமடையாத சிறுபிள்ளைகளுக்கு தொழுகை கடமையாகாது. புத்தி சுயாதீனமாக இருத்தல்: புத்தி நீங்கியவர்களுக்கு தொழுகை கடமையாகாது.

தொழுகையின் அமைப்புகள் (ருக்குன்கள்)

தொழுகையின் அமைப்புகள் (ருக்குன்கள்)

cards

தொழுகையின் அமைப்புகள் (ருக்குன்கள்) தொழுகையின் அமைப்புகள் (ருக்குன்கள்): 1- நின்றுகொள்ளல்: கடமையான ஒவ்வொரு தொழுகையிலும் நின்று தொழ சக்தியுள்ளோர் நின்று தொழுதல் 2- ஆரம்பமாக “அல்லாஹு அக்பர்” எனக் கூற வேண்டும். 3 ஒவ்வொரு ரக்அத்தின் ஆரம்பத்திலும் சூறதுல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும். 4- ருக்கூ விற்காக குணிய வேண்டும். 5- ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்கு வர வேண்டும். 6- சிரம் பணிய வேண்டும். (ஸஜ்தா) 7- சிரம் பணிந்த பின் நடு இருப்பில் அமர வேண்டும். மீண்டும் இரண்டாம் தடவையாக சிரம் பணிய வேண்டும். பின்னர் நிலைக்கு வர வேண்டும். 8- ஒவ்வொரு நிலையிலும் சற்று தாமதிக்க வேண்டும். 9 – கடைசி அத்தஹிய்யாத்திற்காக அமர வேண்டும். 10- கடைசி அத்தஹிய்யாத்தை ஓத வேண்டும். 11- பின்னர் ஸலாம் கூற வேண்டும் 12- இவற்றை வரிசைப்படி செய்ய வேண்டும்.